×

கோயில்களில் வைப்பு நிதி பலமடங்கு அதிகரிப்பு: அமைச்சர் தகவல்

சென்னை: சட்டப் பேரவையில் சுற்றுலாத்துறை, இந்து அறிநிலையத்துறை, கலை பண்பாட்டுத் துறை ஆகியவற்றின் மானியக்கோரிக்கை மீது நேற்று விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினர்கள் பேசியதாவது: மனோஜ்பாண்டியன்: இந்து அறநிலையத் துறையின் கீழ் ஒரு கல்லூரி இந்த பகுதிக்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டே அந்த கல்லூரியை தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்து அறநிலையத் துறையில் பல்வேறு செலவினங்கள் செய்யப்படுகிறது.
அமைச்சர் சேகர்பாபு: உறுப்பினர் கேட்ட கோயில்களில் ஒரு மாதத்தில் இந்த திட்டம் தொடங்கப்படும். அவர் கேட்ட 7 கோயில்களில் திருப்பணி தொடங்கும். இந்து அறநிலையத் துறைக்கு ரூ.528 கோடி மானியமாக தமிழ்நாடு முதல்வர் வழங்கியுள்ளார். 2 ஆண்டுகளில் ரூ.560 கோடி உபயதாரர்கள் நிதி வந்துள்ளது.
மனோஜ் பாண்டியன்: சமயபுரம் கோயிலில் வைப்பு நிதி காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சர் சேகர்பாபு: சமயபுரம் கோயிலின் வைப்பு நிதி ரூ. 100 கோடி அதிகரித்துள்ளது. பழனி கோயிலில் ரூ.120 கோடி வைப்பு நிதி அதிரித்துள்ளது. இந்து அறநிலையத் துறை கோயில்களில் 1117 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மனோஜ்பாண்டியன்: சிலைகள் திருட்டுப் போகாமல் இருக்க பாதுகாப்பு திட்டம் உள்ளதா?
அவை முன்னவர் துரைமுருகன்: திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டு இருக்கிறது; அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சிலர் திருடிக் கொண்டு இருந்தாலும் அதை தடுப்போம்.
வேல் முருகன்: சீர்காழியில் கிடைத்துள்ள செப்பு சிலைகள், செப்பேடுகள் எந்த காலத்தை சேர்ந்தவை என்பதை தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: சீர்காழியில் போர்க்காலங்களில் கோயில் பொருள் பூமியில் புதைத்து பாதுகாப்பது வழக்கம்.

The post கோயில்களில் வைப்பு நிதி பலமடங்கு அதிகரிப்பு: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Department of Tourism ,Hindu Institutions ,Department of Art Culture ,Legislative Assembly ,
× RELATED 45,000 தொட்டிகள் கொண்டு மலர் கண்காட்சி அலங்கார பணிகள் துவங்கியது